சூர்யாவுடன் வெற்றிமாறன் சந்திப்பு: கலைப்புலி எஸ்.தாணு புதிய தகவல்..
சூர்யாவை நடிப்பில் ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவிருந்தார் வெற்றிமாறன். இந்தப் படம் சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற குறுநாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.
படத்தின் அறிவிப்பு வெளியாகி டெஸ்ட் ஷூட்டும் நடத்தப்பட்டது. ஆனால், அதற்கு பிறகு படத்தின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை.
மேலும், படத்திலிருந்து சூர்யா வெளியேறி விட்டதாகவும் தகவல்கள் பரவின. ஆனால், விடுதலை, விடுதலை 2 படங்களை முடிக்கும் பணிகள் ஏற்பட்டதால், ‘வாடிவாசல்’ தாமதம் ஆனது என்று கூறி, முற்றுப்புள்ளி வைத்தார் இயக்குனர்.
இந்நிலையில், இது குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறுகையில், ‘விடுதலை 2 படத்தை வெற்றிமாறன் இப்போது முடித்துவிட்டார். படமும் ரிலீஸாகி விட்டது.
படம் முடிந்ததையடுத்து, பல தயாரிப்பாளர்கள் வெற்றிமாறனிடம் சென்று கால்ஷீட் கேட்டார்கள். ஆனால், ‘வாடிவாசல்’ படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்துக்கு செல்வேன்’ என கூறிவிட்டார்.
வெற்றிமாறனும், சூர்யாவும் விரைவில் சந்திப்பார்கள். ஜனவரி 5-ம் தேதிக்கு பிறகு படம் பற்றிய நல்ல செய்தி வரும்’ என கலையுணர்வோடு தாணு இப்படி சொல்லியிருப்பது, சூர்யா ரசிகர்கள் ஜல்லிக்கட்டு காளைகளாக துள்ளி மகிழ்கிறார்கள்.