ரஜினி 50 ஆண்டு நிறைவு விழா: ரசிகர்களுக்கு கே.எஸ்.ரவிக்குமார் குஷியான அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ்த்திரைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற இருக்கிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்..
2025-ம் ஆண்டுடன் ரஜினி திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 1975-ம் ஆண்டு ‘அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ரஜினி.
அதைத்தொடர்ந்து, இந்தாண்டுடன் ரஜினி சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கின்றார். இதை கொண்டாடும் வகையில், ரஜினியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான கே.எஸ். ரவிக்குமார் ஒரு அசத்தலான அறிவிப்பு ஒன்
றை வெளியிட்டுள்ளார்.
‘ரஜினி சினிமாவிற்கு வந்து ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதனை கொண்டாடும் வகையில் ‘படையப்பா’ படத்தை மிகப்பிரம்மாண்டமாக ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கே.எஸ் ரவிக்குமார் தெரிவித்தார்.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்த இப்படம், கடந்த 1999-ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக படையப்பா இருக்கின்றது. இன்றும் இப்படத்தை டிவியில் ஒளிபரப்பினால் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருந்து வருகின்றது.
அவ்வகையில், அனைவராலும் கொண்டாடப்படும் படமான ‘படையப்பா’ மிகப் பிரம்மாண்டமான முறையில், ரீரிலீஸாக இருப்பது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.