Kalaimamani Award : 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை என மொத்தம் 8 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருது மொத்தம் 201 பிரபலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் கலைமாமணி விருது அளித்து சிறந்த கலைஞர்களை கவுரப்படுத்தி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக இந்த விருது பற்றிய அறிவிப்பு வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் நேற்று மொத்தம் 201 பிரபலங்களுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றின் விவரங்கள் இதோ
2011-ம் ஆண்டு :
நடிகர்கள்
பாண்டு,
ஆர். ராஜசேகர்,
நடிகை குட்டி பத்மினி,
பிண்ணனிப் பாடகி பி.எஸ். சசிரேகா,
நடன இயக்குநர் புலியூர் சரோஜா மற்றும் கலைத்துறை சார்ந்த 30 கலை வித்தகர்கள்.
2012-ம் ஆண்டு :
நடிகைகள் டி. ராஜஸ்ரீ
பி.ஆர். வரலட்சுமி
இயக்குநர் சித்ரா லட்சுமணன் மற்றும் 30 பிரபலங்கள்
2013ம் ஆண்டு :
நடிகர்கள்
பிரசன்னா
ஆர். பாண்டியராஜன்
டி.பி. கஜேந்திரன்
நடிகைகள்
குமாரி காஞ்சனா தேவி
சாரதா
நளினி
நாட்டுபுறப் பாடகி பரவை முனியம்மா
திரைப்பட பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் மற்றும் 30 பிரபலங்கள்
2014ம் ஆண்டு :
நடிகர்கள்
கார்த்தி, சரவணன்
பொன்வண்ணன்
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா
மறைந்த பிலிம் நியூஸ் ஆனந்தன் உள்ளிட்ட 20 பேருக்கு கலைமாமணி அறிவிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு :
திரைப்பட இயக்குநர் ஏ.என். பவித்ரன்
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி
பாடலாசிரியர் யுகபாரதி
ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு
பின்னணிப் பாடகர் கானா பாலா
நிகழ்ச்சி தொகுப்பாளர் சுதா
2016ம் ஆண்டு:
நடிகர்கள்
சசி குமார்
எம்.எஸ். பாஸ்கர்
தம்பி ராமையா
சூரி
நாட்டுப்புறப் பாடகர் கலாராணி மேலும் 20 பிரபலங்களுக்கு
2017ம் ஆண்டு :
நடிகர்கள் விஜய் சேதுபதி
சிங்கமுத்து
நடிகை பிரியாமணி
இசையமைப்பாளர் யுவச் சங்கர் ராஜா
தயாரிப்பாளர் கலைஞானம்
புகைப்படக் கலைஞர் ஸ்டில்ஸ் ரவி மற்றும் 28 பிரபலங்கள்
2018-ம் ஆண்டு :
நடிகர்கள்
ஸ்ரீகாந்த்
சந்தானம்
தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம்
ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்
பின்னணிப் பாடகர் உன்னி மேனன் மற்றும் 34 பிரபலங்கள்