dhanush
அசுரன் திரைப்படம் நல்ல வசூல் செய்த திரைப்படம் தான், ஆனால் ரூ 100 கோடி வசூல் என்றெல்லாம் புழுகாதீர்கள் என பேசியுள்ளார் தயாரிப்பாளர் கே ராஜன்.

தமிழ் சினிமாவில் தற்போது என்ன நடக்கிறது? உண்மையில் படங்கள் எவ்வளவு வசூல் செய்கின்றன என்பது குறித்த தகவல்களையெல்லாம் புட்டு புட்டு வைப்பவர் கே ராஜன்.

இவர் நமக்கு அளித்திருந்த பேட்டியில் கூட பிகில் வசூல் எல்லாம் பொய், அந்த அளவிற்கெல்லாம் வசூல் செய்யவில்லை. விசுவாசம் சூப்பர் ஹிட், விவேகம் சூப்பர் பைலியர் படம் என கூறியிருந்தார்.

இதனையடுத்து தற்போது சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது என்னை நோக்கி பாயும் தோட்டா படம் புஸ்ஸுன்னு போய்டுச்சு என கலாய்த்திருந்தார். மேலும் அசுரன் நல்ல வெற்றி கொடுத்த படம் என கூற அங்கிருந்த பத்திரிகையாளர்கள் ரூ 100 கோடி வசூல் என கூறினர்.

அதற்கு ராஜன் அசுரன் நல்ல படம் தான், ஆனால் ரூ 100 கோடி வசூல்னு எல்லாம் புழுகாதீங்க என விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

100 கோடினு புழுவாதீங்க.. படம் குளோஸ் – தனுஷை கலாய்த்த ராஜன் ( Video )

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.