ஜோஸ்வா இமை போல் காக்க படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ!

Web Ads

ஜோஸ்வா இமை போல் காக்க படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

காசுக்காக கொலை செய்யும் கான்ட்ராக்ட் கில்லரான ஜோஷ்வா (வருண்) வழக்கறிஞர் குந்தவியை (ராஹீ) பார்க்கிறார். கண்டதும் காதல் வர, இருவரும் காதலிக்க குந்தவிக்கு ஜோஸ்வாவின் உண்மை முகம் தெரிய வர இருவரும் பிரிந்து விடுகின்றனர்.

இதையடுத்து வழக்கறிஞராகும் குந்தவி அமெரிக்க நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் மன்னனுக்கு எதிரான வழக்கைக் கையாளுகிறார். இதனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது.

காதலியின் உயிரைக் காப்பாற்ற பார்டிகார்டாக களமிறங்கும் ஜோஷ்வா அவரை கொலைகாரர்களிடமிருந்து எப்படி மீட்கிறார்? என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

Web Ad 2

படத்தை பற்றிய அலசல் :

நாயகன் நாயகியின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு பலத்தை கொடுக்கிறது.

அது மட்டுமின்றி பரபரப்பான ஆக்ஷன் காட்சிகள் படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கின்றன. இடையில் வரும் காதல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

படத்தின் பின்னணி இசையும் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது. கௌதம் மேனன் ஆக்சன் படத்தை கையில் எடுத்து அசத்தலான திரைக்கதையோடு கொண்டு சென்றுள்ளார்.

மொத்தத்தில் ஜோஸ்வா இமைப்போல் காக்க மனதை கவர்கிறது.