வாரிசு திரைப்படத்தில் விஜயின் டான்ஸ் பற்றி நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் ரசிகர்களை உற்சாகமூட்டும் வகையில் வேற லெவலான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ரசிகர்களால் அன்போடு தளபதி என்று அழைக்கப்பட்டு வரும் நடிகர் விஜய் அவர்கள். தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. தமன் இசையில் உருவாகும் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு எண்ணூரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படம் குறித்த மாசான அப்டேட் ஒன்றை நடன இயக்குனரான ஜானி மாஸ்டர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர், தளபதி விஜய் ரசிகர்களே குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வாரிசு திரைப்படத்தில் விஜயின் மாஸ் லெவல் டான்ஸ்க்கு தயாராகுங்கள், திரையரங்குகளில் படத்தை யாரும் சீட்டில் அமர்ந்து பார்க்க மாட்டீர்கள்” என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களின் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.