வெற்றி-தோல்வி குறித்து, ஜெயம் ரவி தெரிவித்த அனுபவ பேச்சு..
நிலவுக்கு தேய்பிறை-வளர்பிறை இரண்டும் உண்டு. அதுபோல அமாவாசை பௌர்ணமி எனவும் உண்டு. அதுபோல தான் வாழ்க்கையே. இப்ப, விஷயத்திற்கு வருவோம்..
ஜெயம் ரவி நடிப்பில் வரும் 14-ம் தேதி ‘காதலிக்க நேரமில்லை’ படம் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தில் அவருடன் நித்யா மேனன் இணைந்துள்ளார். படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள நிலையில், புரொமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, படத்தின் டிரைய்லர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள வகையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. ரொமான்டிக் ஜானரில் உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில, பேசிய ஜெயம்ரவி, ‘ என்னை பொறுத்தவரையில் வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் ஒரே மாதிரியான மனநிலையில்தான் இருப்பேன்.
வெற்றியில்லாமல் தோல்வியிலலை. அதேபோல தோல்வியில்லாமல் வெற்றியில்லை என்பதை உணர்ந்துள்ளேன். கடந்த 2014-ம் ஆண்டில் இதே போன்றதொரு சூழ்நிலையில் தான் இருந்தேன். முன்று வருடங்கள் ஒரே படத்தில் கவனம் செலுத்தினேன். என்னால் ஒரு இன்டர்வியூ கூட கொடுக்க முடியாத சூழல் இருந்தது.
நான் நடித்த படங்கள் தோல்வியடைந்ததால், மனம் உடைந்தேன். ஆனால், அந்த சூழலில் நான் எந்த தவறையும் செய்யவில்லை.
சுயபரிசோதனை செய்தேன். தான் தவறாக நடிக்கவில்லை, தவறான கதையை தேர்வு செய்யவில்லை. இது குறித்தெல்லாம் யோசித்தபோது, என் பக்கத்தில் எந்த தவறும் தோன்றவில்லை.
வெற்றிக்கும் தோல்விக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பதை உணர்ந்ததாலேயே இந்த மாற்றம் சாத்தியமானது.
தோற்பது தோல்வியடைந்ததாக அர்த்தத்தை கொடுக்காது. மாறாக அவர் மறுபடியும் எழாமல் இருப்பதுதான் தோல்வி அடைந்ததாக கருதப்படும். திரும்பவும் எழுந்து கொண்டால் தோல்வி என்பது கிடையாது. இந்த வருஷம் நான் திரும்பவும் வருவேன்’ என நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.
![jayam ravi about his downfall and he assured to come back this year](https://kalakkalcinema.com/wp-content/uploads/2025/01/katha-1.jpg)