Pushpa 2

மூன்றே மாதத்தில் ‘தல’ அஜித் 25 கிலோ எடையை குறைத்தது எப்படி தெரியுமா?

‘பயிற்சியும் முயற்சியும் தான் வெற்றிக்கு ஏணியாகும்’ என்பதை ‘தல’ அஜித் அப்டேட்ஸில் பார்ப்போம்.. வாங்க..

‘தல’ அஜித் துபாயில் நடக்கவுள்ள, 24 மணிநேர கார் ரேஸில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார். 24 மணிநேரம் நடக்கும் இந்த போட்டியில், அதிக தூரத்தை கடக்கும் அணிதான் வெற்றி பெறும். இதற்கான பயிற்சியில் தீவிரம் காட்டி வரும் அஜித் கூறுகையில்,

‘கார் ரேஸில் 18 வயதில் இருந்தே, ஆர்வம் காட்டி வருகிறேன். 2002-ம் ஆண்டு அதற்கான முயற்சியில் இறங்கினேன். 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில், கார் ரேஸில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது.

பின்னர், தன்னுடைய திரைப்படங்கள் காரணமாக சில வருடங்களாக கார் ரேஸில் பங்கேற்க முடியவில்லை. பல வருடங்களுக்கு பின்னர், மீண்டும் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறேன்.

இன்னும் ஒன்பது மாதங்களுக்கு எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் முழுக்க முழுக்க கார் ரேஸில் கவனம் செலுத்த உள்ளேன்.

அஜித்தின் இந்த வாய்ஸ் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்தாலும், எந்த ஒரு நடிகரும் செய்யாத மற்றும் மேற்கொள்ளாத ஒரு முயற்சியில் இறங்கியுள்ள அஜித் அதில் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் மட்டுமின்றி, விஜய் ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துகளை வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இச்சூழலில், ‘விடாமுயற்சி’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது அஜித் தீவிர கார் ரேஸில் கலந்து கொள்வதற்காக, 3 மாதத்தில் சுமார் 25 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார். அஜித் எப்படி இந்த அளவுக்கு வெயிட்டை குறைத்தார்? என்று பல கேள்விகள் ரசிகர்கள் மனதில் இருக்கும் நிலையில்,

‘அஜித் கடந்த மூன்று மாதங்களாக மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல், வெந்நீர் மட்டுமே குடித்து வந்ததாகவும், உடலுக்கு ஆற்றல் தேவைப்படும் என்பதால் புரோட்டின் பவுடர்களும், வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொண்டதாகவும், இதன் காரணமாகவே மிகவும் குறைந்த காலகட்டத்தில் பெரிதாக எந்த ஒரு உடற்பயிற்சியும் இல்லாமல் அஜித் தன் உடல் எடையை குறைத்தார்’ என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ajith how did lose over 25 kg in short time diet secret leaked
ajith how did lose over 25 kg in short time diet secret leaked