Pushpa 2

ராஷ்மிகா மந்தனா விரைவில் நலம்பெற, தீவிர ரசிகர்கள் பிரார்த்தனை..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சிக்கந்தர்’ பட அப்டேட்ஸ் குறித்துப் பார்ப்போம்..

பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து ‘சிக்கந்தர்’ படம் இயக்க போவதாக ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார். பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், படம் ரம்ஜான் பண்டிகை அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது.

முன்னதாக, சல்மான்கானின் பிறந்த நாளையொட்டி ‘சிக்கந்தர்’ படத்தின் டீசர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் சுழன்று வரும் ராஷ்மிகா மந்தனா, ‘சிக்கந்தர்’ படத்தில் இப்போது நடித்து வருகிறார். இதில் சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் கடைசிக்கட்ட ஷூட்டிங் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.

இச்சூழலில் ஜிம்மில், உடற்பயிற்சியில் ஈடுபட்ட ராஷ்மிகா மந்தனா எதிர்பாராதவிதமாக காயமடைந்தார். இதனால் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி ராஷ்மிகா தரப்பில், “அவர் நன்றாகக் குணமடைந்து வருகிறார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்து வரும் அவர் விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார்” என தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ராஷ்மிகாவின் தீவிர ரசிகர்கள் ‘அவர் பூரண குணமடைந்து திரைப்பணி தொடர, பிரார்த்தனை செய்யும் போட்டோஸ் குவிந்து வருகிறது.

rashmika mandanna suffers injury in the gym
rashmika mandanna suffers injury in the gym