நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் அவர்கள் நடிகர் ரஜினி குறித்து வெளியிட்டிருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடன இயக்குனராக வலம் வருபவர் ஜானி மாஸ்டர். தமிழ், தெலுங்கு என பல முன்னணி நட்சத்திரங்களின் சூப்பர் ஹிட் பாடல்களுக்கு கோரியோகிராப் செய்து வரும் இவரது இயக்கத்தில் தமிழில் தனுஷின் பறக்க பறக்க துடிக்குதே பாடலும், விஜயின் ரஞ்சிதமே பாடலும் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

அந்த வகையில் இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலாக தமன்னா மற்றும் ரஜினியின் ஆடலுடன் வெளியான “காவலா” பாடலுக்கும் நடன இயக்குனராக பணி புரிந்திருக்கிறார். அனிருத் இசையமைப்பில் சமீபத்தில் வெளியான இப்பாடல் ரசிகர்களால் தொடர்ந்து ரீல்ஸ் செய்யப்பட்டு இணையதளம் முழுவதும் ஆக்கிரமித்து வேற லெவலில் ட்ரெண்டிங்காகி வரும் நிலையில் இப்பாடலில் ரஜினியுடன் பணியாற்றியது குறித்து நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

அதில் அவர், கிங் ஆஃப் ஸ்டைல் ​​& ஸ்வாக் தலைவர் ரஜினிகாந்த் காரு என்று சொல்ல எனக்கு கிடைத்த ஒரே வார்த்தை பாக்கியம்தான். ஒரு கனவு நனவான தருணம். எனக் குறிப்பிட்டு புகைப்படத்துடன் பகிர்ந்திருக்கிறார். இவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை குவித்து வைரலாகி வருகிறது.