Web Ads

‘ஜனநாயகன்’ விஜய், திமுக சேனலில் சரண்டர்: நெட்டிசன்ஸ் விமர்சனம்

Web Ad 2

ஜனநாயகனும், சன் டிவி ஒளிபரப்பும் பற்றிப் பார்ப்போம்..

விஜய்யின் கடைசிப் படம் என கூறப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வினோத் இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், கெளதம் மேனன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் என பலர் இணைந்துள்ளனர்.

கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் நடித்து முடித்ததும், தமிழகம் முழுவதும் அரசியல்ரீதியான சுற்றுப்பயணத்தை விஜய் மேற்கொள்கிறார். முன்னதாக, மேடைகளில் திமுகவை விஜய், கடுமையான விமர்சித்தார்.

இந்நிலையில், அவர்களுக்கு சொந்தமான சேனலிடமே சரண்டர் ஆகியிருக்கிறார் என விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது, விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி கைப்பற்றி இருக்கிறது எனவும், விற்பனையாக ரூ.55 கோடிக்கு அப்படத்தை வாங்கி உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.

இச்சூழலில், இப்படத்திற்கு போட்டியாக ‘பராசக்தி’ படமும் பொங்கலையொட்டி ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஜனநாயகன் ரிலீஸ் ஆவதால், அதை தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவி ஒளிபரப்புவது கேள்விக்குறி. ஏனெனில், சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பிரச்சாரம் செய்வதுபோல் ஆகிவிடும்’ என இணையவாசிகள் கணிப்பது வைரலாகி வருகிறது.