Web Ads

‘எம்புரான்’ படத்தில் 24 காட்சிகள் அதிரடி நீக்கம்: மறுபதிப்பு பற்றிய தகவல்கள்

எம்புரான் படத்தின் மறுபதிப்பு பற்றிய தகவல்கள் காண்போம்..

மோகன்லால்-பிருத்விராஜ் நடித்த ‘எம்புரான்’ திரைப்படம் பல சர்ச்சைகளை சந்தித்த பிறகு, 24 காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. பின்னர் சென்சார் ஆவணத்தைப் பெற்றது.

குறிப்பாக, மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியின் பெயர் திரைப்படத்தின் நன்றி அட்டையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறைக் காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. மதச் சின்னங்களுக்கு முன்னால் வாகனங்கள் செல்லும் காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பைப் பற்றிக் குறிப்பிடும் காட்சி நீக்கப்பட்டுள்ளது.

வில்லனின் கதாபாத்திரமும் மாற்றப்பட்டு, அவரது பெயர் பஜ்ரங்கி என்பதிலிருந்து பல்தேவ் என மாற்றப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், 17 காட்சிகள் நீக்கப்படும் என்று செய்திகள் வந்தன, ஆனால் மறுபதிப்பு செய்யப்பட்ட சென்சார் ஆவணம் இன்னும் அதிகமான மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

சர்ச்சைக்கு பதிலளித்த தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், மறுபதிப்பு செய்யும் செயல்முறை சம்பந்தப்பட்ட அனைவரின் முழு சம்மதத்துடன் மேற்கொள்ளப்பட்டது என்றும், வெளிப்புற அழுத்தத்தின் காரணமாக அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.

எந்தத் தவறுகளையும் சரிசெய்வது அவர்களின் பொறுப்பு என்றும், பிருத்விராஜை குற்றம் சாட்டவோ அல்லது தனிமைப்படுத்தவோ கூடாது என்றும் வலியுறுத்தினார்.

இந்நிலையில், பல சர்ச்சைகளாலும், ‘எம்புரான்’ பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. 6 நாட்களில் எம்புரான் ரூ. 240 கோடி வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது.

24 scene cut and suresh gopi removed in empuraan movie