Web Ads

‘வீர தீர சூரன்’ முதல் பாகம் குறித்து, விக்ரம் அப்டேட்

‘வீர தீர சூரன்’ முதல் பாகத்தின் கதைக்களம் என்னவாக இருக்கும் என்பது பற்றிப் பார்ப்போம்..

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் நடிப்பில் உருவான ‘வீர தீர சூரன்-2 படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.

தற்போது இப்படம் ரூ. 32 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் வெளியான விக்ரம் படங்களிலேயே ரசிகர்களைக் கவர்ந்ததுடன் விக்ரமுக்கும் திருப்புமுனையான படமாக அமைந்துள்ளது.

இத்தகைய மகிழ்ச்சியான நிலையில், நடிகரும் விக்ரமின் மகனுமான துருவ் விக்ரம் தன் தந்தையுடனான பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘வின்டேஜ் சியான்… வீர தீர சூரனுக்கு நன்றி அருண்குமார் சார்.” என நெகிழ்ச்சியாய் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, விக்ரம் தமிழகமெங்கும் பல்வேறு நகரங்களுக்குச் சென்று, ரசிகர்களைச் சந்தித்து வந்தார் விக்ரம்.

ஈரோட்டில் ரசிகர்களுடன் அவர் பேசும்போது, ‘இந்தப் படத்துக்கு சிறந்த வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல படத்தை கொடுத்த இயக்குனர் அருண்குமாருக்கு நன்றி. இது ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட படம். இதன் முதல் பாகம் மற்றும் 3-ம் பாகம் விரைவில் உருவாகும்.

முதல் பாகத்தில், எனது கதாபாத்திரத்தின் பின்னணி கதை இருக்கும்’ என அப்டேட் கொடுத்தார் சீயான் விக்ரம்.

vikram say about veera dheera sooran movie next part