ஜனநாயகன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

Web Ads

எச். வினோத் இயக்கத்தில், விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் இறுதியாக ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்த இப்படம், தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான பிரச்சினை காரணமாக திட்டமிட்டபடி ரிலீஸாகவில்லை.

இதற்கிடையில், படத்தின் முழு பதிப்பும் இணையத்தில் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

விஜய்யின் கடைசி திரைப்படம் என கூறப்பட்டதால், ரசிகர்கள் மத்தியில் ‘ஜன நாயகன்’ மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு, மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், ‘ஜன நாயகன்’ திரைப்படம் வரும் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த இந்த அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.