இயக்குனர் நெல்சனுக்கு, ரஜினிகாந்த் வாழ்த்து
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து, இரண்டாம் உருவாகி வருகிறது.
இப்படத்தில், முத்துவேல் பாண்டியன் என்ற சிறை அதிகாரியாக ரஜினி நடித்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதில், முதல் பாகத்தில் உள்ள கதாபாத்திரங்கள் தவிர்த்து வேறு சில முக்கிய கதாபாத்திரங்களையும் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் நெல்சன். அவ்வகையில், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
தற்போது மற்றொரு முக்கியமான சிறு கதாபாத்திரத்தில் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளார். ரஜினி – சிவராஜ்குமார் காட்சிகள் முதல் பாகத்தில் பேசப்பட்டது போல், இதில் ரஜினி – பாலகிருஷ்ணா காட்சிகள் பேசப்படும் எனக் கூறப்படுகிறது. ரம்யாகிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ்குமார், சுராஜ் வெஞ்சுரமுடு, யோகிபாபு ஆகியோரும் இணைந்துள்ளனர்.
இப்படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளை இயக்குனர் நெல்சன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதில், நெல்சனுக்கு ரஜினிகாந்த் கேக் ஊட்டுகிறார். மற்றொரு புகைப்படத்தில் யோகிபாபுவும் இடம்பெற்றுள்ளார். நெல்சனுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.