ஜெயிலர் 2 : தயாரிப்பு நிறுவனத்திற்கு நெல்சன் போட்ட கண்டிஷன்..!
ஜெயிலர் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பிலும் நெல்சன் இயக்கத்திலும் வெளியான திரைப்படம் ஜெய்லர்.
மேலும் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார்,வசந்த் ரவி, விநாயகன் போன்ற முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் அனிருத் இசையமைப்பிலும் உருவான இந்த திரைப்படம் வசூல் சாதனை படைத்து ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது
தற்போது இந்த படத்தில் இரண்டாவது பாகம் உருவாகும் என்று எதிர்பார்க்க பட்ட நிலையில், அது குறித்த சில தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஜெயிலர் 2 அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு வைத்திருந்ததாகவும், அதற்கு நெல்சன் 13 மாதமாவது டைம் வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஜெயிலர் ஹிட் கொடுத்த காரணத்தினால் ஜெயிலர் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.