ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபல நடிகை. வெளியான சூப்பர் அப்டேட் இதோ..!
ஜெயிலர் 2 படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
நெல்சன் திலிப் குமார் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியிருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இது மட்டும் இல்லாமல் ரம்யா கிருஷ்ணன் ,வசந்த் ரவி, சிவராஜ்குமார், மோகன்லால் போன்ற முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது .
இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்ற தகவல் வைரலானது. மேலும் இந்த படத்தின் ப்ரோமோ படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தில் கே ஜி எஃப் படத்தின் கதாநாயகியான ஸ்ரீநிதி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.