
அட்லீ இயக்கத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்? முழு விவரம் இதோ.!!
அட்லீ இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறாரா என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Is Sivakarthikeyan acting in Atlee’s direction
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற திரைப்படத்திலும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் அட்லி சிவகார்த்திகேயனை சந்தித்து பேசி உள்ளார். இது அவர்களின் படத்தின் கூட்டணிக்கான சந்திப்பாக இருக்குமா என்ற கேள்வி எழுந்து வருகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Is Sivakarthikeyan acting in Atlee’s direction