Web Ads

திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்த ஸ்ரீதேவி விஜயகுமார்..!

திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்.

sridevi vijayakumar about marriage life
sridevi vijayakumar about marriage life

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயினாக களமிறங்கியவர் ஸ்ரீதேவி விஜயகுமார். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி விஜயகுமார் என அனைவரும் அறிந்ததே.

இவர் தமிழில் சத்யராஜ் நடிப்பில் வெளியான ரிக்ஷா மாமா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் அதனை தொடர்ந்து பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்ற வருகிறார். இந்நிலையில் முதல்முறையாக தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ஸ்ரீதேவி விஜயகுமார்.

அதில் எங்களுக்கு அரேஞ்ச் மேரேஜ் தான் நடந்தது எங்ககிட்ட நிறைய பேர் அரேஞ்சிடு மேரேஜ்க்கு எப்படி ஒத்துக்கிட்டீங்கன்னு கேட்பாங்க நான் அதற்கு காரணம் என்னோட அப்பா அம்மா அவர்கள் எது சொன்னாலும் நான் மீறமாட்டேன் நான் ஏற்கனவே தயாராகத்தான் இருந்தேன் அப்பா அம்மா சொல்றாங்கன்னா கண்டிப்பா அது ஒரு நல்லதுக்காக தான் இருக்கும் என ஒரு நம்பிக்கை உள்ளது கடவுள் புண்ணியத்துல அது எனக்கு நல்லபடியா அமைஞ்சிருச்சு என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

sridevi vijayakumar about marriage life
sridevi vijayakumar about marriage life