சென்னை ஏர்போர்ட்டில் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய திரை உலகில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் மனதை கவர்ந்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். இவர் நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

சென்னை ஏர்போர்ட்டில் இந்தியன் 2!!… வெளியான ஷூட்டிங் அப்டேட் வைரல்!.

அதேபோல் ராம்சரணின் நடிப்பில் உருவாகும் RC15 என்னும் திரைப்படத்தையும் தற்போது இயக்கி வருகிறார். இரு படங்களுக்கும் மாறி மாறி பணியாற்றி வரும் இயக்குனர் ஷங்கர் தற்போது ராம் சரணின் படத்தின் படப்பிடிப்பிற்காக நியூசிலாந்து சென்று இருக்கிறார்.

சென்னை ஏர்போர்ட்டில் இந்தியன் 2!!… வெளியான ஷூட்டிங் அப்டேட் வைரல்!.

அப்படத்தின் படப்பிடிப்பை முடித்து வரும் டிசம்பர் 3ஆம் தேதி சென்னைக்கு திரும்ப இருக்கும் இவர் அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் வரும் 5 ஆம் தேதி தொடங்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையம் மற்றும் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் 12 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.