Indian 2

Indian 2 : ஷங்கர் கமல்ஹாசன் கெட்டப்பில் திருப்தியடையாததால் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு விட்டதாக ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்திலும் 1996-ம் ஆண்டு வெளியான படம் இந்தியன் 2.

17 வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன் – யார் தெரியுமா?

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இதனையடுத்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கி இருந்தது.

இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க நெடுமுடி வேணு, டில்லி கணேஷ், சித்தார்த் என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி 18-ம் தேதி தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிய வேகத்திலேயே முடிவுக்கு வந்துள்ளது.

காரணம் இந்தியன் தாத்தா வேடத்தில் கமல்ஹாசன் கெட்டப் ஷங்கருக்கு திருப்தி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மேக்-அப் சரி செய்து விட்டு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கலாம் என ஷங்கர் கூறியுள்ளார்.

என்ன மனுஷன்யா, அஜித் ரசிகர்களையும் கவர்ந்த விஜய் சேதுபதி – வைரல் வீடியோ.!

எனவே கிடைத்த விடுமுறையை கமல்ஹாசன் பயன்படுத்தி அரசியலில் பிஸியாகி விட்டாராம். மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என தெரியாமல் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குழப்பமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.