மஞ்சுமல் பாய்ஸ் நடிகரை திருமணம் செய்து கொண்டுள்ளார் அபர்ணா தாஸ்.

Actress Aparna Das Marriage Photos : மலையாள சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் அபர்ணா தாஸ். இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து கவினுக்கு ஜோடியாக டாடா படத்தில் எதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார்.

இவருக்கும் மஞ்சுமல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்க்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் இருவரும் காதலித்து வருவதாகவும் தகவல் பரவி வந்தன. இந்த நிலையில் இவர்களுக்கான திருமண கொண்டாட்டங்கள் தொடங்கிய நிலையில் அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இந்த நிலையில் தற்போது அபர்ணா தாஸின் திருமணம் கோவிலில் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.