Simran to join Madhavan
Simran to join Madhavan

Simran to join Madhavan – 17 வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகருடன் சிம்ரன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் 1990-களில் அஜித், விஜய், சூரியா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சிம்ரன்.

திருமணத்திற்கு பிறகு மீண்டும் ரி-என்ட்ரி கொடுத்தும் பெரிய அளவில் இடம் பிடிக்க முடியவில்லை.

இவற்றையெல்லாம் கடந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் பேட்ட படத்தில் யங் லுக்கில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.

இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் பார்வை சிம்ரனின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் இவரது காட்டில் இனி பட மழை பெய்யும் என எதிர்பார்க்கலாம்.

அதன் ஆரம்பமாக மாதவன் நடிக்க உள்ள நம்பி நாராயணன் படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க உள்ளாராம்.

கன்னத்தில் முத்தமிட்டாள், பார்த்தாலே பரவசம் ஆகிய படங்களில் மாதவனுடன் நடித்த சிம்ரன் 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here