ஜிவி பிரகாஷின் இடிமுழக்கம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

Idi Muzakkam Movie Shooting Wrapped : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக பல்வேறு திரைப்படங்கள் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன. மேலும் தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் : 20-ந்தேதிவரை, தோஷ நிவர்த்தி பூஜை

விறுவிறுப்பாக நடந்து முடிந்த ஜிவி பிரகாஷின் இடிமுழக்கம் படப்பிடிப்பு - இறுதி நாளில் என்ன செய்துள்ளார்கள் பாருங்கள் - வைரலாகும் புகைப்படம்

இந்த படத்தினை ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

Valimai Teaser குறித்து வெளியான வதந்தி? – அதிகாரபூர்வ அறிவிப்புக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!

இந்த படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு காட்சியால் தென்மாவட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டு இருந்த போது முப்போகம் விளைவித்து பஞ்சம் தீர்த்த பென்னி குவிக் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தி உள்ளனர்.

இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி லைக்குகளையும் பெற்று வருகிறது. இடிமுழக்கம் அறிவிப்பு வெளியானதிலிருந்து தயாரிப்பு நிறுவனம் அனைத்தையும் வித்தியாசமான முறையில் மக்கள் அனைவரும் வரவேற்கும் வகையில் படத்தினை விளம்பரம் செய்து வருகிறது.

இதே ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் வெகுவிரைவில் முகேன் ராவ் மற்றும் சூரி இணைந்து நடித்துள்ள வேலன் திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.