தனுஷ் உடன் இணைந்து நடித்த ஹாலிவுட் நடிகையான அனாடெர்மாஸ் நேர்காணல் ஒன்றில் தனுஷை புகழ்ந்து பேசியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ் சர்வதேச அளவில் சிறப்பான ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். இவர் கோலிவுட் மட்டுமின்றி கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என தனது எல்லைகளை விரிவுபடுத்தி கொண்டுள்ளார். அந்த வகையில் நடிகர் தனுஷ் அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் உருவான “தி க்ரே மேன்” என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கான பிரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்த சூழ்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகையான அனாடெர்மாஸ் நேர்கணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில் ” தனுஷ் நல்ல நடிகர் மிகவும் கடின உழைப்பாளி.

“தி க்ரே மேன்” படத்தில் அவர் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார். மேலும் இப்படத்திற்கான சண்டைக் காட்சிக்கான பயிற்சிகளை சரியாக முடித்துக் கொடுத்து ஒத்துழைப்பு கொடுத்தார். என்று தனுஷை மனம் திறந்து பாராட்டி பேசியுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.