ஹீரோ படத்தை பற்றி இவ்வளவு நாளாக மறைத்து வைத்திருந்த சீக்ரெட்டை படக்குழு தற்போது உடைத்தெறிந்துள்ளது.
தமிழ் சினிமாவின் மன்னனின் நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை பி.எஸ் மித்ரன் இயக்கியுள்ளார்.
KJR ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 20-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் பா. விஜய் பாடல்களை எழுத இளையராஜா பாடல் ஒன்றை பாடி இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இளையராஜா பாடி இருப்பது இசை பிரியர்களுக்கு நிச்சயம் ஸ்பெஷல் விருந்தாக இருக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்று.
#HeroSurprise Thank you Music Maestro Ilaiyaraja sir for lending your voice to a song from #Hero ???? The film is blessed even more now! ❤️@Siva_Kartikeyan @Psmithran @thisisysr @poetpaavijay @kalyanipriyan @george_dop @AntonyLRuben @InfinitMaze @sivadigitalart @LahariMusic pic.twitter.com/QxmpzQduHh
— KJR Studios (@kjr_studios) December 15, 2019