மனசு வலிக்குது என சீரியலில் இருந்து வெளியேறுவது குறித்த வீடியோ வெளியிட்டுள்ளார் சதீஷ்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபிநாத் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சதீஷ். தனது எதார்த்தமான நடிப்பால் சீரியலின் மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறார்.

ஏற்கனவே ஒருமுறை இவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அவரை நடிக்க வைத்தது. எப்படி அந்த நிலையில் தற்போதைய கதையின் போக்கு கண்டமேனிக்கு சென்று கொண்டு இருக்கிறது.

கோபியை முழு வில்லனாக மாற்றி விட்டனர். அமிர்தாவுக்கு இரண்டு புருஷன் கதை ஆகிவிட்டது, அதேபோல் செழியன் கோபியை போலவே இன்னொரு செட்டப் தேடி கொண்டுள்ளார். இப்படி கதை முழுக்க முழுக்க மக்கள் மத்தியில் வெறுப்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் பலரும் கோபியின் கதாபாத்திரத்தை கண்ட மேனிக்கு விமர்சனம் செய்துள்ள நிலையில் அவர் அது ஒரு கதாபாத்திரம் என்பது புரிந்து கொள்ளாமல் பலர் மோசமான வார்த்தைகளால் திட்டுவது மனசுக்கு கஷ்டமா இருக்கு என தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் எவ்வளவு நாள் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பேன் என தெரியவில்லை என வீடியோவில் கூறியுள்ளார்.

இதனால் இவர் மீண்டும் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறும் முடிவு இருப்பதாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.