பக்திப் பரவசம்: கடவுளை பற்றி, ரஜினியிடம் ஸ்ருதிஹாசன் உரையாடல்.?
ஸ்ருதிஹாசனின் கடவுள் பக்தியை கண்டு, இணையவாசிகள் விடுத்துள்ள அன்புக் கோரிக்கையை பார்ப்போம்.. வாங்க..
அப்பா (கமல்) நாத்திகர். ஆனால், தான் கோயிலுக்குப் போனதைப் பற்றி ஸ்ருதிஹாசன் மனம் திறந்து பேசியதாவது:
‘எனக்குக் கடவுள் மேல நம்பிக்கை அதிகம். ஆனா, அப்பாவுக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லாததால், எங்களால் கோயிலுக்குப் போக முடியாமல் இருந்தது. அதனால், கள்ளத்தனமாக கோயிலுக்குப் போயிடுவேன். அடிக்கடி சர்ச்சுக்கும் போவேன். ஆனால், ரொம்ப நாளைக்கு இது அப்பாவுக்குத் தெரியாது. தாத்தா கூடப் போனாலும், அப்பாகிட்ட சொல்லக் கூடாது’ன்னு சொல்லி தான் கூட்டிட்டு போவேன்.
நான் இன்னைக்கு இந்த நிலைமையில் இருப்பதற்கும், தைரியமாக இருப்பதற்கும் காரணம் கடவுள் மேல் உள்ள நம்பிக்கைதான். ஆனால், இது அப்பாவுக்குப் பிடிக்காது.
எங்களது வீடு முழுக்க நாத்திகம்தான். அம்மா கடவுள் பக்தி உள்ளவங்க. ஆனாலும், அதை வெளியே சொல்லக் கூடாது.
நான் வளரும்போது எங்களுக்குக் கடவுள் அப்படிங்குறது இல்லவே இல்ல. ஆனால், கடவுள் சக்தியை நானே கண்டுபிடிச்சேன், புரிஞ்சுக்கிட்டேன்’ என பக்தி பரவசமாய் கூறியுள்ளார்.
இது குறித்து நெட்டிசன்ஸ், தற்போது ‘கூலி’ படத்தில் நடிக்கும் நீங்கள், ரஜினியிடம் ஆர்வமாய் ஆன்மீகம் பற்றி ஏதும் பேசியிருக்கிறீர்களா? என கேட்பது வைரலாகி வருகிறது.