புத்தாண்டில் திருப்புமுனையாக, ஜெயம் ரவியும் அதர்வாவும் எண்ணியது ஈடேறுமோ?
எஸ்கே ஹீரோவாக நடிக்கும் படத்தில், இணைந்த இந்த இருவருக்கும் திருப்புமுனை ஏற்படுமா? என்ற தகவல் பார்ப்போம்..
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு இது 25-வது படமாகும். இப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க, ஸ்ரீலீலா நாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இந்தப் படத்தில் இணைந்தது குறித்து அதர்வா, ‘பரதேசி படத்திலிருந்து சுதா கொங்கராவை தெரியும். நாங்கள் இருவரும் ரொம்ப குளோஸ் ஃப்ரண்ட். சேர்ந்து படம் பண்ணுவோம்’ என சொல்லியிருந்தார்.
அதற்காக, இந்த படத்தில் இணையலாம் என சொன்னார்கள். அதோடு, இந்த படத்தில் இணைந்த எல்லோருமே தெரிந்தவர்கள்தான்’ என கூறியுள்ளார்.
அதர்வா நடிப்பில் வெளியான எந்தப் படமும் ஹிட் கொடுக்கவில்லை. அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தக் கூடிய கதைக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்படி ஒரு கதையை எஸ்கே25 படம் கொடுக்கும் என எதிர்பார்க்கிறார்.
பானா காத்தாடி படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘பரதேசி’ படத்தில் பாராட்டை பெற்று, ‘ இமைக்கா நொடிகள்’ படத்திலும் நல்ல அடையாளம் பெற்ற அதர்வாவுக்கு, பிறக்கும் புத்தாண்டில் எண்ணிவை ஈடேறட்டும்.
2025-ம் ஆண்டில் ஜெயம் ரவி நடிப்பில் ஜெனி, காதலிக்க நேரமில்லை, ஜேஆர்34 மற்றும் எஸ்கே 25 படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், ஜெயம் ரவி போடும் கணக்கும் ஜெயமாகட்டும்.!