விஜய் படங்களுக்கு ரூ 100 கோடி பட்ஜெட் எல்லாம் தேவையே இல்லை என கவுதம் மேனன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் திறமையான இயக்குனர்களில் ஒருவர் கவுதம் மேனன், இவரது இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் இன்று என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படம் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக கவுதம் மேனன் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அப்போது விஜயுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என கேட்டதற்கு அவருடன் பணியாற்ற எனக்கும் ஆசையாக தான் இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் அவர் தொடர்ந்து நல்ல ஹிட்டான படங்களை கொடுத்து வருகிறார். இறுதியாக வெளியான பிகில் படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது.

மேலும் இப்போ எல்லாம் விஜய் படங்கள் ரூ 100 கோடி பட்ஜெட்டில் தான் இருக்கிறது. ஆனால் நான் அவ்வளவு எல்லாம் செலவு செய்ய மாட்டேன். இவ்வளவு செலவும் தேவையில்லை.

நான் விஜயை இயக்கினார் ரூ 30 கோடியில் படத்தை முடித்து விடுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

என்னிடம் ஒரு கதை உள்ளது, அதில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும். அந்த கதை நிச்சயம் அவருக்கு செட்டாகும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.