கவுதம் ராம் கார்த்திக் நடித்துள்ள 19-வது படத்தின் அப்டேட்ஸ்..

மணிரத்னம் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் ‘கடல்’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகம் ஆனார். இவர், தனக்கான நிலையான இடம் பிடிக்க முயன்று வருகிறார். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் தகவல்கள் பார்ப்போம்..
கவின், அனுபமா தாஸ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘டாடா’ படத்தை இயக்கியவர் கணேஷ் கே. பாபு. இவர், தற்போது கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார். தீனா ராகவன் எழுதி, இயக்கும் இந்தப் படம் கவுதம் ராம் கார்த்திக்கிற்கு 19-வது படமாகும்.
பல கட்டங்களாக நடைபெற்று வரும் இப்படத்தின் டைட்டில் டீசர் நாளை 6-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான போஸ்டரில் பச்சை மற்றும் நீல நிற கொடியின் மீது கவுதம் ராம் கார்த்திக் 19 என்பதை குறிக்கும் வகையில், GRK #19 என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்தப் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டைட்டில் டீசரைத் தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகவுள்ளது.
