சிம்ரன் சொன்னதை கேட்டு ஷாக்கான சரத்குமார்: சுவாரஸ்ய நிகழ்வு..

சிம்ரனுக்கு கடந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துவிட்டது. அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில் கவுரவத் தோற்றத்தில் வந்தபோதிலும் ரசிகர்கள் சிம்ரனை கொண்டாடினார்கள். மேலும், அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் மனைவியாக சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் கடந்த ஆண்டு அதிக லாபம் ஈட்டியது.
இந்நிலையில், வரலட்சுமி சரத்குமார் இயக்கி, தயாரித்து, நடித்திருக்கும் ‘சரஸ்வதி’ படம் நாளை 6-ந்தேதி நாளை ரிலீஸாகிறது. இச்சூழலில் நடந்த சரஸ்வதி பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், சிம்ரன் சொன்னதைக் கேட்டு ஃபிட்னஸ் ஃப்ரீக்கான சரத்குமார் ஷாக் ஆகிவிட்டார்.
அதாவது, சிம்ரனுக்கு ஏப்ரல் மாதம் வந்தால் 50 வயதாகிவிடும். வளர்ந்த இரண்டு மகன்களுக்கு தாய். ஆனால், அவர் என்றும் இளமையாகவும், அழகாகவும் இருப்பதன் ரகசியம் குறித்து கேட்டார்கள். அதற்கு சிம்ரனோ, ஒர்க்அவுட் தான் காரணம் என்றார். தினமும் நான்கு முறை ஒர்க்அவுட் செய்வேன் என்றார்.
அதைக் கேட்ட சரத்குமாரோ, என்னது தினமும் நான்கு முறை ஒர்க்அவுட் செய்வீங்களா என அதிர்ச்சியாக கேட்டார். அதைப் பார்த்த சிம்ரன் சிரித்துவிட்டு ‘சாரி சார், தினமும் இல்லை. வாரத்திற்கு நான்கு முறை ஒர்க்அவுட் செய்வேன். அதை தான் மாற்றிக் கூறிவிட்டேன்’ என்றார்.
சிம்ரன் சொன்னதையும், சரத்குமார் கொடுத்த ரியாக்சனையும் பார்த்து அங்கிருந்தவர்கள் சிரித்துவிட்டார்கள். சிம்ரன் பெயரை சொன்னாலே அவர் ரொம்ப ஸ்லிம்மாக இருப்பது தான் ரசிகர்கள் பெரிதாக பேசுவார்கள்.
நீங்கள் மட்டும் எப்படி இப்படி இடுப்பழகியாகவே இருக்கிறீர்கள் மேடம் என்று சிம்ரனிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ரொம்ப சிம்பிள்னு சொல்லி ஒரு உடற்பயிற்சியை செய்து காட்டி இதை தான் தினமும் செய்கிறேன்’ என்றார்.
