37 விநாடி என்பது நயன்தாராவுக்கு 3 விநாடி மாதிரியா?: இணையதள கேள்விகள்..
37 விநாடி என்பது நயன்தாராவுக்கு 3 விநாடி மாதிரியா? என இணையவாசிகளின் கேள்வி வைரலாகி வருகிறது. இது குறித்து பார்ப்போம்..
நயன்தாராவின் திருமண ஆவணப்படமான ‘பியாண்ட் தி ஃபேரிடேல்’ படத்தின் காப்புரிமைப் பிரச்சினையால் சர்ச்சையை எதிர்கொண்டது தெரிந்ததே.
‘நானும் ரவுடி தான்’ படத்தின் சில காட்சிகளை பயன்படுத்த தயாரிப்பாளரான தனுஷ் தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்ததால், தனது ஆவணப்பட வெளியாக தாமதமானதாக நயன்தாரா குற்றம்சாட்டி இருந்தார்.
மேலும், ஆவணப்படத்தில் இருந்த வெறும் 3 விநாடி காட்சிகளுக்கு தனுஷ் ரூ.10 கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும் தனுஷை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார்.
மேலும், தனிப்பட்ட வெறுப்பினால் தனுஷ் தன்னை பழிவாங்குவதாகவும் நயன்தாரா கூறியிருந்தார்.
இந்த சர்ச்சைக்கு மத்தியில் ‘பியாண்ட் தி ஃபேரிடேல்’ நவம்பர் 18 முதல் பிரபலமான டிஜிட்டல் தளத்தில் நயன்தாரா பிறந்த நாளில் வெளியானது.
ஆனால், இந்த வீடியோவில் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் 3-வினாடி கிளிப்பிங் இல்லை, படத்தின் மேக்கிங்கில் இருந்து கிட்டத்தட்ட 37 வினாடிகள் ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை விமர்சித்தும் பதிவிடுவதும் வைரலாய் தெறிக்கிறது.
இது குறித்து என்ன விளக்கம் அளிக்கப் போகிறார் நயன் பார்ப்போம் என வெயிட்டிங்கில் இருக்கின்றனர் சில நெட்டிசன்கள். ஆக, மழை விட்டாலும், தூவானம் விடாது போல.!