ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்துக்கு உண்மையான காரணம் மோகினி டேயா?: வைரலாகும் தகவல்கள்..
ஒரு தமிழராக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற இசை சாம்ராஜ்யம் ஏ.ஆர்.ரகுமான். பொதுவாழ்வில், எவ்வித கிசுகிசுக்களுக்கும் சர்ச்சைகளுக்கும் ஆளாகா நல்ல மனிதர் என பேர் பெற்றவர்.
இந்நிலையில், இவர் தனது 29 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததன் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்ன என்பதை இருவருமே வெளியிடவில்லை.
ஆனால், அதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வகையில், நடைபெற்ற நிகழ்வுகள் பற்றி காண்போம்..
ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றி வந்த மோகினி டே என்கிற இசைக்கலைஞரும் நேற்று தன்னுடைய விவாகரத்து முடிவை அறிவித்துள்ளார். அதாவது, ஏ.ஆர்.ரகுமான் அறிவித்த அடுத்த ஒரு மணிநேரத்திலேயே மோகினி டேவும் தன் கணவரை பிரிவதாக அறிவித்திருந்ததால், இருவரது இந்த முடிவையும் தொடர்புபடுத்தி சில வதந்திகளும் பரவி வைரலாகின.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சாய்ரா பானு ஜோடியின் வழக்கறிஞர் வந்தனா ஷா தெரிவிக்கையில்,
‘ஏ.ஆர்.ரகுமானுக்கும் மோகினி டேவுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. சாய்ராவும், ரகுமானும் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் விவாகரத்து முடிவை எடுத்துள்ளனர். ஜீவனாம்சம் குறித்து இருவரும் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை’ என விளக்கம் அளித்தார்.
மேலும், இந்த முடிவை அவர்கள் இலகுவாக எடுக்கவில்லை என்றும் இருவரும் உண்மையானவர்கள் என்பதால், இதை போலி திருமணம் எனவும் சொல்ல முடியாது’ என வந்தனா ஷா கூறியுள்ளார்.
29 வயதே ஆகும் மோகினி டே, ஏ.ஆர்.ரகுமானுடன் சேர்ந்து 40-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பணியாற்றி இருக்கிறார். கொல்கத்தாவை சேர்ந்த இவர், மார்க் ஹர்ட்சச் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பும் ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்து அறிவிப்பும் அடுத்தடுத்து வந்தது தான் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிகழ்வுகள் இரண்டும் எதிர்பாராது நடைபெற்றதா? இல்லை, திட்டமிட்டு நிகழ்ந்ததா? எனவும் இணையதளவாசிகள் ஏதோ ஆதங்கத்தில் அங்கலாய்ப்பதும் வைரலாகி வருகிறது.