ஆந்திராவில் ரசிகரால் கட்டப்பட்ட சமந்தாவின் கோயில் இன்று திறக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவருக்கு ஆந்திர மாநிலத்தில் வசிக்கும் ரசிகர் ஒருவர் கோயில் கட்டியுள்ள தகவல் இணையத்தில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.

அதாவது, ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் ஆலப்பாடு பகுதியைச் சேர்ந்த கார் டிரைவரான தெனாலி சந்தீப் என்பவர் தனது வீட்டில் ஒரு பகுதியில் சமந்தாவின் மார்பளவு இருக்கக்கூடிய சிலையை உருவாக்கி கோயில் கட்டியுள்ளார். அதனை சமந்தாவின் பிறந்த நாளான இன்று திறந்து வைத்திருக்கிறார்.

மேலும் இது குறித்து அந்த ரசிகர் பகிர்ந்து இருக்கும் தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், நடிகை சமந்தா சினிமாவில் அறிமுகமானது முதல் நான் அவரது ரசிகனாக இருந்து வருகிறேன். அவரது உணர்வு மற்றும் கருணை, அறக்கட்டளை மூலம் பல குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவி செய்துள்ளார். அது என்னை ஊக்கப்படுத்தியது. அதனால்தான் அவருக்கு கோயில் கட்டியதாகவும் இதற்கு தனது குடும்பமும் மிகவும் உறுதுணையாக இருந்ததாகவும் அந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.