Sarkar Politician Comment

Sarkar Politician Comment :

சர்கார் படம் குறித்து சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், ” விஜய் தீவிரவாதிகளை போல மக்களை வன்முறைக்கு தூண்டி விடுகிறார்” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கி விஜய் நடித்துள்ள சர்கார் படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படத்தை பார்த்துவிட்டு விஜய் ரசிகர்கள், பொதுமக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சர்கார் திரைப்படம் குறித்து அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் விமர்சனம் செய்துள்ளார்.

அவர் பேசியதாவது, ” சர்கார் திரைப்படம் மூலம் ஒரு நடிகர் முதல்வராக ஆவது குறித்து பேசியுள்ளார்.

விஜய் 3 மணி நேரத்தில் முதல்வராவது எப்படி என்று கற்பனை செய்து கற்பனை உலகத்திலேயே வாழ்ந்துள்ளார். “

வேறு ஒருவரின் கதையை திருடி, வேறு ஒருவரின் பணத்தில் நடித்து, தியேட்டரில் பணம் சம்பாதிக்கும் ஒருவர் தமிழக அரசை விமர்சனம் செய்வது எப்படி சரியாகும்” .

இவர்கள் படம் எடுக்கிறேன் என்ற போர்வையில் தமிழக அரசின் திட்டங்களின் பொருட்களை எரிப்பது என்பது மிக மிகத் தவறு. நடிகர் விஜய் தீவிரவாதிகளை போன்று மக்களை தூண்டிவிட்டுள்ளார். மேலும் வேண்டுமென்றே இவர்கள் இவ்வாறு செய்து வருகின்றனர்.

இந்தப் படத்தில் நடித்த விஜய் , தயாரிப்பாளர், இயக்குனர் , விநியோகஸ்தர்கள் ஆகியோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க சட்டத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

மேலும், இந்த நடிகர்க்கு வெளிநாட்டு சதிகாரர்களுடன் தொடர்பு உள்ளது. தமிழக நலத்திட்டங்கள் எதுவும் செயல்படக் கூடாது என்று வெளிநாட்டு சதிக்கூட்டதுடன் இவர்கள் சேர்ந்து செயல்படுகிறார்கள் “. இவ்வாறு தமிழக அமைச்சர் சிவி சண்முகம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here