
அஜித் கொடுத்த இன்ஸ்பிரேஷன் என சொல்லி பிஎம்டபிள்யூ பைக்கில் மாஸாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை மஞ்சு வாரியர்.
மலையாள சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவர் தமிழ் சினிமாவில் தனுஷுக்கு ஜோடியாக அசுரன் படத்தில் நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
துணிவு படத்தில் மஞ்சு வாரியர் அஜித்துக்கு இணையாக பைக் ஓட்டி ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிஎம்டபிள்யூ பைக்கில் செம மாஸ் ஆக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் அஜித் கொடுத்த இன்ஸ்பிரேஷன் என்பது போல ஹாஷ்டேக்குகளை பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்