Pushpa 2

புஷ்பா-2 படத்தில் செம ஹாட் ஸாங்: சமந்தாவுக்கு பதில், வேறு நடிகை புக்கிங்

ஒரு பாட்டு, ஒரேயொரு செம குத்துப்பாட்டு ஒரு படத்திற்கு பெரிய விளம்பரமாக அமைந்து விட்டது. ஆம், புஷ்பா திரைப்படம்தான். தற்போது இதன் இரண்டாம் பாகத்திலும் செம ஹாட்டான ஸாங் எடுக்கப்படுகிறது. இது குறித்து பார்ப்போம்..

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் அல்லு அர்ஜுன். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள அல்லு அர்ஜுன் புஷ்பா படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார். இன்னும் சொல்லவேண்டுமென்றால் புஷ்பா திரைப்படம் அவரை இந்தியளவில் பிரபலமாக்கியுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் புஷ்பா.

மிகப்பெரிய பொருட்ச்செலவில் பான் இந்திய படமாக உருவான புஷ்பா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ராஷ்மிகா இப்படத்தில் நாயகியாக நடித்திருக்க சமந்தா ஒரு குத்து பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

இப்படத்தின் பாடல்களும் டீசரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்த நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.

இப்படத்தின் பாடல்களும் சில காட்சிகளும் சர்ச்சைக்கு உண்டானாலும், படத்திற்கு சில கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் புஷ்பா அடித்து நொறுக்கியது. மேலும் இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்தது. இந்நிலையில் தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ளதாம். மேலும் அல்லு அர்ஜுன் மற்றும் பஹத் பாசில் இடையே நடக்கும் காட்சிகள் படத்தில் ஹைலைட்டான விஷயமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதல் பாகத்தில் பஹத் பாசில் சில காட்சிகளில் தான் நடித்திருப்பார்.

ஆனால் இரண்டாம் பாதியில் பஹத் பாசில் மெயின் வில்லனாக வருவார் என்றும், அவருக்கும் அல்லு அர்ஜூனுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் பரபரப்பாக இருக்கும் என்றும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், புஷ்பா திரைப்படத்தில் ஓ சொல்றியா என்ற பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனமாடியிருப்பார். அப்பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. என்னதான் அப்பாடல் சில சர்ச்சைகளை சந்தித்தாலும் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது.

அதைப்போல புஷ்பா 2 படத்தில் ஒரு பாடல் இடம்பெற இருப்பதாக தகவல் வந்துள்ளது. ஆனால் அப்பாடலில் சமந்தா ஆடவில்லை என்றும் அவருக்கு பதிலாக வேறொரு முன்னணி நடிகை ஆட இருப்பதாகவும் சொல்லப்பட்டது

தற்போது, அந்த நடிகை யார் என தெரியவந்துள்ளது. தெலுங்கில் முன்னணி நாயகியாக வளர்ந்து வரும் ஸ்ரீலீலா தான் புஷ்பா 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இருப்பதாக தகவல் வந்துள்ளது.

லேட்டஸ்ட் சென்சேஷனாக வலம் ஸ்ரீலீலாவின் நடனத்திற்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. குறிப்பாக, குண்டூர் காரம் படத்தில் அவர் ஆடிய நடனம் அனைவரையும் வியக்க வைத்தது.

அவ்வாறு இருக்கையில் புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜூனுடன் ஸ்ரீலீலா இணைந்து நடனமாடி இருப்பதாக வந்த தகவல் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

லீலாவின் ஆட்டம் லீலைகளின் சொர்க்கம்தான்.!