Pushpa 2

திரிஷா பிடிக்குமா? நயன்தாரா பிடிக்குமா?: நடிகர் கவின் பதில்

கேள்விகள் பல வகை. அதில், நடிகர் கவினிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, மிக இயல்பாக அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? வாங்க.. விஷயத்திற்கு போவோம்..

கவின் நடிப்பில், தீபாவளி கொண்டாட்டமாக பிளடி பெக்கர் படம் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அறிமுக இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரித்துள்ளார். இதன் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் கோலிவுட்டில் தனது என்ட்ரியை கொடுத்துள்ளார்.

இந்த படம் பிளாக் காமெடியை மையமாக வைத்து வெளியான சூழலில்,சிறப்பான வசூலையும் பெற்று வருகிறது. படத்தில் பிச்சைக்காரராக நடித்துள்ளார் கவின். பிளாக் காமெடியை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

இந்நிலையில், தற்போது கவின் தனியாக கொடுத்துள்ள அடுத்தடுத்த பேட்டிகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் அவரிடம் திரிஷாவா அல்லது நயன்தாராவா யாரை பிடிக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கவின், நடிகை திரிஷாவை நீண்ட நாட்களாக தனக்கு பிடிக்கும் என்று பதிலளித்துள்ளார்.

நயன்தாராவுடன் தற்போது புதிய படத்தில் நடித்து வரும் கவின் நயன்தாராவும் மிகச் சிறப்பாக பழகுவதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாகவே விக்னேஷ் சிவனுடன் பழகி வந்ததாகவும் ஆனால் நயன்தாராவுடன் பழகும் சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளதாகவும் கவின் கூறியுள்ளார்.

நயன்தாரா சூட்டிங்கின்போது கிடைக்கும் சிறிய சிறிய சந்தர்ப்பங்களில்கூட தன்னுடைய குடும்பத்தினருக்காக நேரத்தை செலவிட்டு வருவதாகவும் நண்பர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது நயன்தாராவும் தனக்கு மிகச்சிறந்த நண்பராக மாறியுள்ளதாகவும் கவின் கூறியுள்ளார்.

முன்னணி நடிகர்களிடம் வழக்கமாக எப்போதும் திரிஷா அல்லது நயன்தாரா யாரை பிடிக்கும் என்ற கேள்வி கேட்கப்படுவதுண்டு.

அவர்களும் இதற்கு உற்சாகமாக பதிலளிக்கும் நிலையில், தற்போது கவினின் பதில் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது. கவின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

அடுத்ததாக மாஸ்க் படம் ரிலீசாகவுள்ளது. நிற்கக் கூட நேரமில்லாமல் படங்களில் கமிட்டாகி அவர் நடித்து வருகிறார். நயன்தாராவுடன் கவின் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கவின்-நயன் நல்ல பொருத்தம் தான்.!