‘லப்பர் பந்து’ இயக்குனருடன், நடிகர் தனுஷ் புதிய கூட்டணி
பன்முகத்திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். தற்போது செம பிஸியான ஷெட்யூலில் இருக்கிறார். இத்தகு பரபரப்பான நிலையில் லப்பர் பந்து இயக்குனருடன் இணையவிருக்கிறார். இது குறித்த தகவல் அறிவோம்..
நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகின்றார் தனுஷ். தன் ஐம்பதாவது திரைப்படமான ராயன் படத்தை தனுஷே இயக்கி நடித்திருந்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிறகு, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை என இரு படங்களை இயக்கி வருகின்றார் தனுஷ்.
மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் குபேரா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார் தனுஷ். இவ்வாறு தனுஷ் ஒருபக்கம் இயக்கம் மறுபக்கம் நடிப்பு என செம பிசியாக இருக்கின்றார்
தனுஷ் நடித்து இயக்கிய ராயன் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகி வெற்றிபெற்றது. இதனைதொடர்ந்து அடுத்ததாக அவர் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முற்றிலும் இளம் நடிகர்களை வைத்து தனுஷ் இயக்கி இருக்கும் இப்படம் மலையாளத்தில் வெளியான ப்ரேமலு படம் போல செம ஜாலியான ரொமான்டிக் காமெடி படமாக இருக்கும் என தெரிகின்றது.
மேலும் இப்படத்தின் மூலம் தனுஷ் தன் அக்கா மகனை ஹீரோவாக அறிமுகம் செய்து வைக்கின்றார். இப்படத்திலிருந்து வெளியான சிங்கிள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்திற்கு பிறகு இட்லி கடை என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகின்றார் தனுஷ்.
ஒரு பீல் குட் படமாக இட்லி கடை உருவாகி வருகின்றது. இட்லி கடை படத்தை தொடர்ந்து குபேரா என்ற படத்திலும் தனுஷ் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
இதையடுத்து, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கவுள்ளார் தனுஷ். இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட இருப்பதாக தகவல்கள் வந்தன.
ஆனால், தனுஷ் இப்படத்தை துவங்குவதால் உறுதியாக இருக்கின்றார் என்றே சொல்லப்படுகின்றது. இப்படத்தை தொடர்ந்து போர் தொழில் இயக்குனர் இயக்கத்திலும் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வரும் தனுஷ் லப்பர் பந்து இயக்குனரின் இயக்கத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்தன. தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லப்பர் பந்து. இப்படத்தை புதுமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருந்தார்.
மிகப்பெரிய வெற்றியை பெற்ற இப்படத்திற்கு பிறகு இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவிற்கு தனுஷிடம் கதை சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழரசன் சொன்ன கதை தனுஷிற்கு மிகவும் பிடித்துப்போகவே அவரது இயக்கத்தில் நடிக்க தனுஷ் ஒப்புக்கொண்டுள்ளார்.
அடுத்தடுத்து தனுஷ் படங்களில் நடிக்க கமிட்டாகியிருந்தாலும், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிப்பதற்காக கால்ஷீட் ஒதுக்கி வருவதாக தகவல் வருகின்றன. இட்லி கடை படத்தை தயாரிக்கும் ஆகாஷ் என்ற தயாரிப்பாளர் தான் இப்படத்தையும் தயாரிக்க இருக்கிறார் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.