இட்லி கடையும், தனுஷ் வாங்கும் சம்பளமும்: கோலிவுட் புதிய தகவல்
அவரவர் மார்க்கெட்டுக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. இதில், நடிகர் தனுஷ் இயக்கும் இட்லி கடை படத்திற்கு பெற்ற சம்பள விவரம் குறித்து பார்ப்போம்..
நடிகராக கலக்கி வந்த தனுஷ் பவர் பாண்டி படத்தில் இயக்குநராக அறிமுகமாகி வெற்றி கண்டார். அடுத்ததாக தனது 50ஆவது படமான ராயனை தானே இயக்கி நடித்தார். அதில் எஸ்ஜே சூர்யா, சந்தீப், காளிதாஸ் ஜெயராம், துஷாரா, அபர்ணா முரளி என ஏகப்பட்டோர் தனுஷுடன் நடித்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான ராயன் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.
ராயன் படத்தை முடித்த தனுஷ், அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார். ‘வாத்தி’ படத்தை வைத்து தெலுங்கிலும் ஒரு ரவுண்டு வரலாம் என்று நினைத்திருந்த அவருக்கு, அந்தப் படம் சரியாக போகவில்லை.
எனவே, குபேரா படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், தெலுங்கின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவும் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இதற்கிடையே ராயன் படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோதே அடுத்த படத்தின் இயக்க வேலைகளிலும் இறங்கினார் தனுஷ் அதன்படி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கியிருக்கிறார்.
அதில் தனுஷின் உறவினர், மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அண்மையில்கூட படத்திலிருந்து வெளியான கோல்டன் ஸ்பேரோ பாடல் யூட்யூப் வியூஸ்களில் சக்கைப்போடு போட்டது. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார் தனுஷ். DAWN பிக்சர்ஸ. தயாரிக்கிறது. படத்தை தனுஷே இயக்குகிறார்; ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் நித்யா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார்.
மேலும் லப்பர் பந்து இயக்குநருடனும் அவர் இணையவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் தனுஷ் வாங்கும் சம்பளம் குறித்து கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கையில்,
‘இட்லி கடை படத்துக்காக 120 கோடி ரூபாயை தனுஷ் கேட்டதாக சொல்கிறார்கள். அந்த 120 கோடி ரூபாயும் தனுஷுக்கு சம்பளம் இல்லை. அதாவது அந்தப் பணத்தை தாருங்கள். ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இட்லி கடை படத்தை எடுத்து தருகிறேன் என்பதுதான் அது.
தனுஷ் அப்படி கேட்பதில் ஓவர் எல்லாம் எதுவும் இல்லை. ஏனெனில், அந்தப் பணம் தனுஷின் கைகளுக்கு சென்றால் முழுக்க முழுக்க அவர்தான் செலவு செய்வார். 50 கோடி ரூபாய் அந்தப் படத்துக்கு செலவாகிறது என்றால் மீதம் இருக்கும் 70 கோடி ரூபாய் அவருக்கான சம்பளம்” என்றார்.
சம்பளம் தானே முக்கியம்.!