Pushpa 2

‘கூலி’ படத்தில் ரஜினி செய்த மாற்றம்: லோகேஷ் ஆச்சரியம்

சூப்பர் ஸ்டார் ரஜினி சில புதிய மாற்றங்களுடன் ‘ கூலி’ படத்தில் லோகேஷ் அனுமதியுடன் இணைத்திருக்கிறார். அது குறித்த சுவாரஸ்ய தகவல் பார்ப்போம்..

ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஞானவேல் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலை பொறுத்தவரை இப்படம் வெற்றிப்படமாகவே அமைந்துள்ளது.

இதனால், மகிழ்ச்சியுடனும் உத்வேகத்துடனும் தற்போது கூலி படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் ரஜினி. இது குறித்த வெளியான தகவல் பார்ப்போம்..

கடந்த மாதம் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமடைந்து வீடு திரும்பினார்.

அதனைத்தொடர்ந்து சில நாட்கள் ஓய்வில் இருந்த ரஜினி தற்போது கூலி படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.மேலும் கூலி படத்திற்காக ரஜினி மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியெல்லாம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.

இந்நிலையில் கூலி படத்தில் ரஜினி ஒரு மாற்றத்தை செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது.

ரஜினி தன் படங்களில் சில விஷயங்களை சேர்ப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றார். தனி ஸ்டைல், பன்ச் வசனங்கள் போன்ற விஷயங்களை ரஜினி தன் படங்களில் இயக்குனரின் அனுமதியுடன் சேர்த்திருக்கிறார்.

அது மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. அந்த வகையில் ரஜினி கூலி திரைப்படத்திலும் சில பன்ச் வசனங்களை இணைந்திருக்கின்றாராம்.

கதைப்படி, படத்தில் பன்ச் வசனங்களை லோகேஷ் எழுதவில்லை. இருந்தாலும், சில இடங்களில் பன்ச் வசனங்களை இணைத்தால் நன்றாக இருக்கும் என ரஜினி கூறியிருக்கின்றார்.

லோகேஷும் ஓகே சொல்ல, ரஜினி சில பன்ச் வசனங்களை படத்தில் இணைத்திருக்கிறார். அதனை கேட்ட லோகேஷ் அசந்து போய்விட்டாராம். கண்டிப்பாக ரஜினி பேசும் அந்த பன்ச் வசனங்கள் மிகப்பெரிய அளவில் ரீச்சாகும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இந்த தகவல் எல்லாம் உண்மையா ? இல்லையா ? என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும், கூலி படத்திற்காக ரஜினி நிறைய மெனெக்கெடுவதாகவே தெரிகின்றது. எப்படியாவது கூலி படத்தின் மூலம் ஆயிரம் கோடி வசூல் சாதனையை நிகழ்தி காட்ட வேண்டும் என்பது தான் ரஜினியின் இலக்காக இருக்கின்றதாம்.

இதுவரை, தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் ஆயிரம் கோடி வசூலை பெறவில்லை. எனவே, தான் நடிக்கும் கூலி படத்தின் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தும் முனைப்போடு இருக்கின்றார் ரஜினி.

குறி வெச்சா இரை விழும்ல..

rajinikanth inputs to lokesh foe coolie movie
rajinikanth inputs to lokesh foe coolie movie