ஃபஹத் ஃபாசில் நடித்த டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள் வெளியீட்டுத் தேதி!

எஸ்.எஸ். ராஜமவுலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் வரும் அக்டோபர் 2-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஃபஹத் ஃபாஸில் மற்றும் சாரா பலேகர் இணைந்து நடிக்கும் இப்படத்தில், சூரி மற்றும் திவ்யா என்ற கதாபாத்திரங்களில் இருவரும் நடித்துள்ளனர்.
ஃபேண்டஸி மற்றும் சாகச அம்சங்கள் நிறைந்த கலகலப்பான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் தேதி போஸ்டரில், ஃபேண்டஸியான பின்னணியில் ஃபஹத் ஃபாஸில் மற்றும் சாரா பலேகர் இடம்பெற்றுள்ளனர். இது ரசிகர்களுக்கு காத்திருக்கும் மாயாஜால அனுபவத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
ஷோபு யார்லகட்டா மற்றும் எஸ்.எஸ். கார்த்திகேயா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் கதைக்களத்தில் இடம்பெறும் சுவாரஸ்யமான ஃபேண்டஸி அம்சங்களும், தனித்துவமான உலகமும் படத்தின் முக்கிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், இசையமைப்பாளர் கால பைரவா இசையில் உருவான ‘கேக்கு வாக்கு’ (Cakeu Walku) பாடலையும் படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 2-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
