பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள போகும் 10 போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை நிறைவு செய்துள்ள நிலையில் விரைவில் ஏழாவது சீசன் தொடங்க உள்ளது.

இந்த முறையும் உலகநாயகன் கமல்ஹாசன் நிகழ்ச்சி தொகுத்து வழங்க உள்ளார். போட்டியாளர்களாக யார் யார் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

இப்படியான நிலையில் போட்டியாளராக பங்கேற்க போகும் 10 பிரபலங்கள் குறித்து தெரியவந்துள்ளது.

  1. விஜே ஜாக்குலின்
  2. பப்லு பிரித்திவிராஜ்
  3. ரட்சிதாவின் முன்னாள் கணவர் தினேஷ்
  4. ரேகா நாயர்
  5. பஸ் டிரைவர் ஷர்மிளா
  6. டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்
  7. உமா ரியாஸ்கான்
  8. ஷாலு சம்மு
  9. கே பி ஒய் சரத்
  10. சகிலாவின் மகளான திருநங்கை மிலா

உள்ளிட்ட 10 பேரிடம் இந்த நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.