எதிர்நீச்சல் : இரண்டாம் பாகத்தில் நடிக்க போகும் ஹீரோயின் யார் தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியின் ஒளிபரப்பாகிய சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
குறிப்பாக அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தின் நடித்த மாரிமுத்துவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது ஆனால் அவர் எதிர்பாராத விதமாக மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி நடிக்க தொடங்கினார்.

ஆனாலும் சீரியல் விரைவில் முடிவுக்கு வந்தது. இதில் மதுமிதா ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் இந்த சீரியலை இரண்டாம் பாகம் வெளியாகும் என தகவல் வெளிவந்த நிலையில் மதுமிதா நடிக்கப் போவதில்லை என்று சமீபத்தில் விளக்கம் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து அந்த கதாபாத்திரத்தில் நடிகை பார்வதி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் சன் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலின் இரண்டாம் பாகம் குறித்து உங்கள் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
