தமிழக வெற்றிக் கழகம் : ஆயுத பூஜைக்கு வாழ்த்து தெரிவித்து விஜய் வெளியிட்ட பதிவு..!
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தளபதி 69 என்ற திரைப்படம் உருவாக உள்ளது. எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாக உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தில் பூஜை கோலாகலமாக நடைபெற்றது, மேலும் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ் ,மமீதா பைஜூ, மோனிஷா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.
இது தளபதி விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்தப் படம் முடிந்த கையோடு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபடுவார் என்று தகவல் வெளியானது.

அதற்கேற்றார் போல் கட்சியின் பெயர், கொடி, கட்சிப் பாடல் என அனைத்தையும் அறிமுகம் செய்து மாநாட்டிற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது விஜய் தமிழக வெற்றி கழகம் சார்பில் வாழ்த்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில் தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும் பயன்படுத்தும் வாகனங்களையும் அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை ,சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய திருநாள்களில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து புதிய முயற்சிகளும் வெற்றிபெற இனிய நல்வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
— TVK Vijay (@tvkvijayhq) October 11, 2024
