ஜான்சி ராணிக்கு ஆதிரை அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த ப்ரோமோ வீடியோவில் எல்லாரும் சேர்ந்து ஏதோ பண்றாங்கப்பா, ஆதிரை கழுத்துல தாலி ஏறுற வரைக்கும் கண்ணுல விளக்கெண்ணையை விட்டுக்கிட்டு பாக்கணும் என குணசேகரன் கதி கலங்கி போய் பேசுகிறார்.
இன்னொரு பக்கம் ஜான்சிராணி புடவை எடுத்து வந்து கொடுத்து மரியாதையா உங்க பொண்ணு இந்த புடவையை கட்டிக்கிட்டு என் புள்ள பக்கத்துல வந்து நிக்க சொல்லுங்க என்று சவுண்டு போட ஆதிரை எனக்கு பிடிக்கல என பதில் சொல்கிறார்.
உடனே ஜான்சி ராணி சேலையை புடிக்கலையா? என் புள்ளையை பிடிக்கலையா? என கேள்வி கேட்கிறார். இதனால் இன்றைய எபிசோட் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.