Edappadi Palanisamy
Edappadi Palanisamy

Edappadi Palanisamy – சென்னை: வருகிற இடைத் தேர்தலில் அதிமுக கட்சி குறைந்தது 9 இடங்களில் வென்றாக வேண்டும்.

அப்படி நடந்தால்தான் அக்கட்சி நடப்பு ஆட்சியைக் காப்பாற்ற முடியும். ஒரு இடம் குறைந்து வென்றால் கூட ஆட்சி கவிழ்ந்து விடும் நிலையில் உள்ளது ஆளும்கட்சி..

தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதி 18, திருவாரூர் எம்எல்ஏவாக இருந்த கருணாநிதி மற்றும் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏகே போஸ் இவர்கள் மறைந்துவிட்டதால்,காலியானதாக அறிவிக்கப்பட்ட 2 தொகுதி.

மேலும் ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ணா ரெட்டி குற்றவழக்கில் தண்டனை பெற்றதால் அவரது பதவி பறிக்கப்பட்டு, காலியான 1 என மொத்தம் 21 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆனால் இதில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என நேற்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழக சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 234. இதில் 21 உறுப்பினர்கள் இல்லை. எனவே மொத்தம் தற்போது உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை 213 ஆகும் .

இந்நிலையில் பெரும்பான்மை அடிப்படையில் ஒரு கட்சிக்கு 116 எம்எல்ஏக்கள் தேவை. ஆனால் தற்போது அதிமுகவிடம் 114 பேர்தான் உள்ளனர்.

மேலும் அதிமுகவின் பலம் வைத்து பார்க்கையில் தற்போதைக்கு 108 ஆக மட்டும் தான் உள்ளது.

எனவே வரும் இடைத் தேர்தலில் அதிமுக குறைந்தது 9 இடங்களில் வென்றாக வேண்டும்.

தேர்தலில் ஒரு இடம் குறைந்து வென்றால் கூட ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற நிலையில் உள்ளது.

எனவே லோக்சபா தேர்தலை விட சட்டசபை இடைத் தேர்தல்தான் அதிமுகவுக்கு முக்கியமாக கருதப்படுகிறது.