ப்ரீ புக்கிங்கில் தெறிக்க விடும் டிராகன் திரைப்படம்.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
டிராகன் படத்தின் பிரீ புக்கிங் வசூல் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வரும் நிலையில் தற்போது ப்ரீ புக்கிங்கிலும் தெறிக்க விட்டு வருகிறது.
தற்போது வரை ஃப்ரீ புக்கிங் 1.3 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
