‘வாடிவாசல்’ படத்தில் சூர்யாவின் என்ரி சீன் என்ன தெரியுமா?

தமிழரின் பண்பாடு நிறைந்த, வீரம் செறிந்த விளையாட்டு ஜல்லிக்கட்டு. இதனை உலகுக்கு ஓங்கி உரைப்பதே ‘வாடிவாசல்’ எனலாம்.
சி.சு.செல்லப்பா எழுதிய குறுநாவல் ‘வாடிவாசல்’ ஆகும். இதனை திரைப்படமாக உருவாக்கும் பணியில் வெற்றிமாறன் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளார். சூர்யா நடிக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு மிக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார்.
அவ்வகையில் ‘வாடிவாசல்’ டெஸ்ட் ஷூட் முடிந்து, லண்டனில் சிஜி தொடர்பான பணிகள் நடப்பதாக அறிவித்திருந்தார் இயக்குனர் வெற்றிமாறன்.
தயாரிப்பாளர் தாணுவும் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், விடுதலை 2 படத்தை முடித்திருக்கும் வெற்றிமாறன், அடுத்ததாக ‘வாடிவாசல் படத்தை முடித்துவிட்டுத்தான் வருவேன் என தன்னிடம் வரும் தயாரிப்பாளர்களிடம் கூறி வருவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் ‘வாடிவாசல்’ படம் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவிக்கையில், ‘வாடிவாசல்’ ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. படத்தில் சூர்யா அறிமுகமாகும் காட்சி அவ்வளவு அருமையாக இருக்கும். அந்தக் காட்சிக்காகவே ரசிகர்கள் படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள். கண்டிப்பாக இந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும்’ என்றார்.
இதனால் ‘வாடிவாசல்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது. சூர்யா ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.